அச்சுறுத்தும் விளம்பர பதாகை

Update: 2023-07-19 11:28 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, அரிமளம் ஒன்றியம் கே.புதுப்பட்டியில் உள்ள அறந்தாங்கி சாலையின் ஓரத்தில் 2 மின்கம்பங்கள் அருகருகே அமைக்கப்பட்டுள்ளன. இந்த 2 மின்கம்பங்களை பயன்படுத்தி அதன் நடுப்பகுதியில் விளம்பர பதாகையை கட்டி உள்ளனர். தற்போது ஆடி மாதம் என்பதால் பலத்த காற்று அடிக்கும்போது, இந்த மின்கம்பங்கள் சேதம் அடைந்து சாலையில் விழும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பங்கள் சாலையில் விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்