முட்செடிகளால் விபத்து அபாயம்

Update: 2023-07-16 16:53 GMT

ஒட்டன்சத்திரம்-பழனி நெடுஞ்சாலையில் சத்திரப்பட்டி பகுதியில் சாலையின் இருபுறமும் முட்செடிகள் வளர்ந்து, சாலையை ஆக்கிரமித்து வருகின்றன. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது இந்த முட்செடிகள் பட்டு காயத்தை ஏற்படுத்துகின்றன. இந்த முட்செடிகளால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சாலையோரம் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி