லாரிகளால் விபத்து

Update: 2023-07-12 11:37 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரானைட் குவாரிகள் அதிக அளவில் உள்ளன. குறிப்பாக கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து ராட்சத கிரானைட் கற்கள் வெளியூர்களுக்கு அதிக அளவில் லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன. இவ்வாறு ராட்சத கிரானைட் கற்களை ஏற்றி செல்லும் பல லாரிகள் உரிய விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. குறிப்பாக லாரிகளின் பின்னால் எந்தவித பிடிப்பும் இல்லாமல் கிரானைட் பாரத்தை ஏற்றி, வேகமாக இயங்குகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பர்கூர் அருகே லாரியில் இருந்து கிரானைட் கல் விழுந்து 2 பேர் பலியானார்கள். அதே போல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி, உத்தனப்பள்ளி சாலைகளில் கிரானைட் லாரிகள் ஆபத்தான முறையில் இயங்கப்பட்டு வருகின்றன. எனவே அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், சூளகிரி.

மேலும் செய்திகள்