கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் பல இடங்களில் கனரக லாரிகள் நிறுத்தப்படுகின்றன. இதனால் இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனத்தை நிறுத்தாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.