பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் ரெயில் பயணிகளுக்காக ரெயில் டிக்கெட் முன்பதிவு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையம் பகுதி நேரமாக செயல்படுவதினால் ரெயில் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, இந்த ரெயில் டிக்கெட் முன்பதிவு நிலையத்தை முழு நேரமும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.