வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-07-09 12:41 GMT

அரியலூர் பஸ் நிலையத்திலிருந்து கலெக்டர் அலுவலகம் வழியாக தினமும் எண்ணற்ற பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்கிறது . இந்நிலையில் அரியலூர் பழைய பஸ் நிலையம் அகற்றப்பட்டு புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பயணிகள் அனைவரும் பஸ் நிலையத்தின் கிழக்கு புற சாலையில் நின்று பஸ் ஏறுகின்றனர். இந்நிலையில் இங்கு அமைந்துள்ள செண்டர் மீடியன் முதல் நகராட்சி அலுவலகம், சந்தைப்பேட்டை, கலெக்டர் அலுவலக ரவுண்டானா வரை மண்கள் தேங்கியுள்ளது. குறிப்பாக கலெக்டர் அலுவலகத்தின் முன்புறமுள்ள ரவுண்டானாவில் அதிகளவில் மண்கள் தேங்கியுள்ளது. இவ்வழியே செல்லும் கனரக வாகனங்கள் மின்னல் வேகத்தில் செல்வதால், மண்கள் அதிகளவில் காற்றில் பறப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். சில சமயம் விபத்துகளும் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்