அரியலூரில் தற்போது புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி அரியலூரில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான பயணிகள் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலையின் அருகில் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். இதையடுத்து பயணிகளின் வசதிக்காக இப்பகுதியில் கீற்றுக் கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. அதனை பயணிகள் பயன்படுத்த முடியாத வகையில் தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி கடை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் பயணிகள் வெயிலிலும், சாலையிலும் நின்று தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு பஸ் ஏறி செல்கின்றனர். இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் வெயிலில் நின்று பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.