அரியலூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் தொழிற்பயிற்சி நிலைய அலுவலகம் ஆகியவற்றின் நுழைவாயிலில் வாகனங்கள் குறைந்த வேகத்தில் செல்லும் வகையில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வேகத்தடைகள் சாலையின் ஓரம் வரை முழுமையாக அமைக்கப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் வேகத்தடையை விட்டு அதன் ஓரத்தில் சென்று புதிய பாதையை உருவாக்கியுள்ளனர். இதனால் வாகனங்கள் வேகமாக செல்லும்போது இந்த அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வேகத்தடைகளின் ஓரங்களையும் முழுமையாக சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.