புதுக்கோட்டையின் பிரதான சாலையான கீழராஜ வீதியில் சாலையின் இருபுறங்களிலும் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்திற்கு பெரிதும் இடையூறு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வங்கிகள் இருக்கும் இடங்களில், வங்கியின் நுழைவாயிலுக்குள் செல்லமுடியாதபடி அதிக வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.