அடிக்கடி விபத்து

Update: 2023-07-05 11:37 GMT

சேலம் -கரூர், கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே சென்டர் மீடியா அமைக்கப்பட்டுள்ளது. நானப்பரப்பு முதல் கரூர் செம்மடை வரை ஆங்காங்கே சென்டர் மீடியா உடைத்து தடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த தடத்தின் வழியாக லாரிகள், வேன்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்கள் குறுக்கே செல்லும் வாகனங்கள் மீது மோதி அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி