இரவு நேரத்தில் பயணிகள் அவதி

Update: 2023-07-02 12:02 GMT

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து பெரம்பலூர் வழியாக செல்லும் பஸ்கள் இரவு நேரத்தில் துறைமங்கலம் 3 ரோடு வழியாக செல்லாமல் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் ஆர்ச் வழியாக பெரம்பலூர் பஸ் நிலையத்திற்கு செல்கின்றன. இதனால் துறைமங்கலம் 3 ரோடு பகுதிக்கு டிக்கெட் எடுத்துள்ளவர்கள் பெரம்பலூர் பஸ் நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்