கரூர் மாவட்டம், நொய்யல் அருகே மரவாபாளையம் பகுதி வழியாக இரும்பு பாதை செல்கிறது. இந்த இரும்பு பாதை வழியாக ஏராளமான சரக்கு, அதிவேக விரைவு பயணிகள், சாதாரண பயணிகள் ரெயில்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் ரெயில்வே பாதை அருகே உள்ள நாடார்புரம் மற்றும் காந்தி நகர் பகுதியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் வசித்துவருபவர்கள் இந்த ரெயில்வே பாதையை கடந்து தான் மரவாபாளையம் வரவேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இதனால் சில நேரங்களில் ரெயில்வே பாதையை கடக்கும் போது அதிவிரைவு ரெயில் வரும்போது விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட ரெயில்வே நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.