கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி- தாராபுரம் சாலையில் போலீஸ் நிலையம் உள்ளது. தாராபுரம் சாலையில் இருந்து சின்னதாராபுரம் செல்லும் சாலை பிரிந்து செல்கிறது. ராஜபுரம் வழியாக சின்னதாராபுரம், வெள்ளகோவில், க.பரமத்தி செல்லும் பஸ்கள் அனைத்தும் அரவக்குறிச்சி போலீஸ் நிலைய முன்பு பயணிகளை இறக்கி விட்டு ஏற்றி செல்கிறது. இப்பகுதியில் தினமும் ஏராளமானோர் பஸ்சுக்காக காத்து நிற்கின்றனர். அரவக்குறிச்சி போலீஸ் நிலையம் முன்பு பயணியர் நிழற்குடை அமைத்தால் பஸ்காக காத்திருக்கும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக வயது முதிர்ந்தோர்கள் மிகவும் பயனடைவார்கள். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.