நாமக்கல் பூங்கா சாலை வழியாக தான் திருச்செங்கோடு, கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் செல்லும். கடந்த ஒரு மாத காலமாக இந்த சாலையில் சாக்கடை கால்வாய் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த சாலையில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளன. இதனால் பரமத்தி சாலை, கோட்டை சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடித்து பூங்கா சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.