சாலையோரத்தில் நிறுத்தப்படும் லாரிகள்

Update: 2023-06-25 10:41 GMT

கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் கல் குவாரியிலிருந்து ஏராளமான லாரியில் செயற்கை மணல்கள், கற்கள், ஜல்லிகளை ஏற்றிக்கொண்டு பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று இறங்கிவிட்டு வருகின்றனர். அதேபோல் ஜல்லிகளை ஏற்றுக்கொண்டு செல்லும் போதும், இறக்கிவிட்டு வரும்போதும் புன்னம் சத்திரம் பகுதியில் சாலையோரத்தில் லாரிகளை நெடுவிலும் நிறுத்திவிட்டு மணிக்கணக்கில் வெளியில் சென்று விட்டு வருகின்றனர். இதனால் இந்த வழியாக ஏராளமான தனியார் மற்றும் அரசு பஸ்கள், லாரிகள், கார்கள் என சென்று வருகின்றன. சாலை ஓரத்தில் ஏராளமான லாரிகள் நிறுத்தப்படுவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்