புதுக்கோட்டை-திருச்சிக்கு இரவில் அதிக பஸ்கள் இயக்க கோரிக்கை

Update: 2023-06-21 13:33 GMT
புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு நேரடியாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதேபோல காரைக்குடி, அறந்தாங்கி உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு பஸ்கள் உள்ளன. இந்த பஸ்கள் எல்லாம் பகல் நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாகவோ, அல்லது ஒரே நேரத்தில் வரிசையில் நின்று அடுத்தடுத்து புறப்படும் வகையில் உள்ளது. ஆனால் இரவு நேரங்களில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு நேரிடையாக பஸ்கள் இயக்கப்படுவதின் எண்ணிக்கை மிககுறைவாக உள்ளது. இரவு 10 மணிக்கு மேல் திருச்சிக்கு செல்ல ஏராளமான பயணிகள் காத்திருக்க வேண்டியது உள்ளது. காரைக்குடி உள்ளிட்ட ஊர்களில் இருந்து புதுக்கோட்டை வழியாக திருச்சி செல்லக்கூடிய அரசு பஸ்கள் தான் உள்ளது. இதிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதனால் பயணிகள் பலர் பஸ்சுக்காக காத்திருந்து அவதி அடைகின்றனர். அதனால் இரவு 10 மணக்கு மேல் பயணிகளின் நலன் கருதி புதுக்கோட்டையில் இருந்து நேரடியாக திருச்சிக்கு அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி