தஞ்சை மாவட்டம் கும்பகோணம் புதிய பஸ்நிலையத்துக்கு தஞ்சை சாலையில் இருந்து மினி பஸ்கள் வந்து செல்கின்றன. இவை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் குறுகலான வணிக வளாகம் அதிகம் உள்ள சர்ச் சாலை வழியாக வருகின்றன. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன்காரணமாக வேலைக்கு செல்பவர்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுப்பார்களா?