கரூர் பகுதியில் இருந்து பரமத்தி வேலூர் பகுதிக்கும், பரமத்தி வேலூர் பகுதியில் இருந்து கரூர் பகுதிக்கும். அதேபோல் பரமத்தி வேலூர் பகுதியில் இருந்து கொடுமுடி பகுதிக்கும், கொடுமுடி பகுதியில் இருந்து பரமத்தி வேலூருக்கும் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த அரசு டவுன் பஸ்களில் ஒரு சில பஸ்கள் மட்டும் எல்.எஸ்.எஸ். பஸ்களாக இயக்கப்படுகிறது. மற்ற அனைத்து டவுன் பஸ்களும் தமிழக அரசு அறிவித்துள்ள பெண்களுக்கான இலவச பஸ்களாக செயல்படுகிறது. இந்நிலையில் தவுட்டுப்பாளையம், வேலாயுதம்பாளையம் பகுதிகளில் நின்று கொண்டிருக்கும் பெண்கள் அரசு டவுன் பஸ்களில் ஏறி செல்வதற்கு பஸ்சை நிறுத்தினால், பஸ் டிரைவர்கள் பஸ்சை நிறுத்தாமல் சென்று விடுகின்றனர். இதனால் பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.