பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள போஸ்ட் ஆபீஸ் தெரு பகுதியில் சாலையோரத்தில் உள்ள கடைகள் ஆக்கிரமிப்பாளும், தரை கடைகளினாலும் போக்குவரத்திற்கு பெரிதும் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.