கரூர் மாவட்டம், புன்னம்சத்திரத்தில் இருந்து வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் அதியமான் கோட்டை, ஓலப்பாளையம் பிரிவு சாலை எதிரே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் நலன் கருதி பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இந்த பயணிகள் நிழற்குடையில் சிமெண்டு அட்டை வேயப்பட்டுள்ளது. இந்நிலையில் பயணிகள் நிழற்குடையில் போடப்பட்டிருந்த சிமெண்டு அட்டைகள் உடைந்து விட்டது. மேலும் அங்கு அமரக்கூடிய வகையில் போடப்பட்டிருந்த காங்கிரீட் பலகைகளை சமூக விரோதிகள் எடுத்துச் சென்று விட்டனர். இதனால் பயணிகள் அந்த நிழற்குடையில் அமர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.