கரூர் மாவட்டம் பரமத்தி வேலூர்- கொடுமுடி செல்லும் சாலையில் சேமங்கி பெரியார் நகர் உள்ளது. இந்த பகுதியில் இருந்து கவுண்டன்புதூர் செல்லும் பிரிவு சாலை உள்ளது. இந்த கொடுமுடி செல்லும் தார் சாலை வழியாக ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் உள்பட இரவு பகலாக பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் பெரியார் நகர் பகுதியில் தார் சாலை வளைவான நிலையில் உள்ளதால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகன விபத்து தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. அதே போல் தார் சாலையில் சென்று கவுண்டன்புதூர் செல்பவர்கள் திடீரென கவுண்டன்புதூர் பிரிவு சாலையில் திருப்பும்போது எதிரே வரும் வாகனங்களும், பின்னால் வரும் வாகனங்களும் அந்த வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது. எனவே இதனை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கவுண்டன்புதூர் பிரிவு சாலை எதிரே வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.