பஸ் வசதி வேண்டும்

Update: 2023-06-11 17:23 GMT

திருச்சி மாவட்டம், துறையூரில் இருந்து சென்னைக்கு கொப்பம்பட்டி, தம்மம்பட்டி, ஆத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் வழியாக பஸ் வசதி இல்லை. இதனால் கொப்பம்பட்டியை சுற்றி உள்ள கிராம பகுதி மற்றும் திருச்சி மாவட்ட எல்லை பகுதியில் உள்ள கிராம மக்கள் சென்னை செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் பஸ் மாறி மாறி செல்வதால் கால விரயம், பண விரயம் ஏற்படுகிறது. ஆகவே போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இதில் உடனே தலையிட்டு பகல் மற்றும் இரவு நேரத்தில் சென்னைக்கு பஸ் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி