பஸ் வராததால் பரிதவிக்கும் பயணிகள்

Update: 2023-06-11 11:19 GMT

திருவாரூர் பஸ் நிலையத்தில் இருந்து பேரளம் வழியாக காரைக்காலுக்கு அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலான பஸ்கள் பேரளம் பஸ் நிலையத்துக்கு வந்து பயணிகளை ஏற்றிக்கொள்வதில்லை. மாறாக காரைக்கால் செல்லும் சாலையில் நிறுத்திக்கொண்டு பயணிகளை ஏற்றிச்செல்கின்றனர். இதனால் பயணிகள் பஸ் நிலையம் இருந்தும் பஸ் வராததால் பரிதவித்தபடி நிற்கும் சூழல் நிலவுகிறது. மேலும், பஸ் நிற்கும் காரைக்கால் செல்லும் சாலைக்கு ஓடி சென்று பஸ் ஏறுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பிரச்சினைக்கு முறையான தீர்வு காண நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி