திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா காட்டூர் ஒன்றியம் வேதபுரம் ஒரத்தூர் இணைப்பு சாலையில் வேகத்தடை இல்லை. இதனால் சாலை வழியாக வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதன்காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.பொதுமக்கள் சாலையை அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். வேகத்தடை இல்லாததால் அந்த பகுதியில் சாலை விபத்துகளும் அதிகரித்து உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலையில் தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.