திட்டக்குடி தாலுகா கொடிக்களம் கிராமத்தில் உள்ள அம்மா பொண்ணுநகரில் வடிகால் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழியின்றி குடியிருப்புகளை சுற்றி தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் கால்வாய் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.