வேகத்தடை, சிக்னல் விளக்கு தேவை

Update: 2023-06-07 13:40 GMT
சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையம் அருகே சாரதா காலேஜ் ரோடு, மூன்று ரோட்டிற்கு செல்லும் சாலைகள் உள்ளன. இந்த சாலைகள் இணைப்பு பகுதியில் அதிகமான போக்குவரத்து உள்ளது. மேலும் இங்கு சிக்னல் விளக்குகள் செயல்படவில்லை மற்றும் வேகத்தடையும் இல்லை. இதனால் இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சிலர் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அங்கு வேகத்தடை அமைத்து, சிக்னல் விளக்கு செயல்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி