கள்ளக்குறிச்சி அருகே சமத்துவபுரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் இருந்து சமத்துவபுரத்திற்கு செல்லும் பொரும்பாலான பஸ்களில் அரசு மருத்துவமனை என்ற பெயர் எழுதப்படாமல் உள்ளது. இதனால் புதிதாக ஆஸ்பத்திரிக்கு செல்லும் பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திாிக்கு செல்லும் பஸ் எது என்று தொியாமல் அவதிப்படுகின்றனர். எனவே கள்ளக்குறிச்சியில் இருந்து சமத்துவபுரம் செல்லும் அனைத்து பஸ்களிலும் அரசு ஆஸ்பத்திரி என்ற பெயரை எழுத வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.