போக்குவரத்து நெரிசல்

Update: 2023-06-04 11:48 GMT

நாகை மாவட்டம் திட்டச்சேரி கடைத்தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன்காரணமாக மருத்துவ சிசிக்சை உள்ளிட்ட அவசர வேலைகளுக்கு செல்பவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி