போக்குவரத்து நெரிசல்

Update: 2023-05-31 11:53 GMT
நாமக்கல் பூங்கா சாலை வழியாக சேலம், ஈரோடு, கோவை, ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஏராளமானவை சென்று வருகின்றன. இந்த சாலையில் சாக்கடை கால்வாய் சீரமைக்கப்பணி நடைபெற்று வருகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் பரமத்தி சாலையில் திருப்பி விடப்பட்டு உள்ளன. எனவே பரமத்தி சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சாக்கடை சீரமைப்பு பணியை விரைந்து முடித்து பூங்கா சாலையில் விரைவில் வாகனங்களை அனுமதிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி