புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வழியாக செல்லும் திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஏராளமான பஸ்கள், கனரக வாகனங்கள் சென்று வருகிறது. இந்த சாலையை மட்டும் விரிவாக்கம் செய்துவிட்டு திருமயம் அருகே உள்ள பாம்பாற்று பாலத்தை விரிவுபடுத்தி புதிய பாலம் கட்டாமல் அதே குறுகிய பலமாக பழைய பாலம் இருந்து வருகிறது .இந்த சாலை வழியாக அதிகமான கனரக வாகனங்கள் இரவு, பகலாக சென்று வருகிறது. வாகனங்கள் இந்த பாலம் அருகே செல்லும்போது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.