போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-05-28 16:23 GMT

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் பட்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட மசயனூரில் சிமெண்டு ரோட்டின் நடுவே மின்கம்பம் உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எதிர் எதிரே வாகனங்கள் வரும்போது ஒதுங்கி செல்ல முடிவதில்லை. வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். இரவு நேரங்களில் அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் மின்கம்பத்தில் மோதி கீழே விழ வாய்ப்பு உள்ளது. உடனே மின்கம்பத்தை அகற்றி ரோட்டோரம் மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி