புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே மேட்டுப்பட்டி நந்தன வயல் எதிரியில் புதுக்கோட்டை- ஆலங்குடி மெயின் ரோட்டில் சாலையின் ஓரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி பள்ளமாக காணப்படுவதினால் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.