அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி ஜங்ஷன் பகுதியில் முட்டுவாஞ்சேரி செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளின் வசதிக்காக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இரவு நேரத்தில் மது பிரியர்கள் மது போதையில் இந்த இருகையை அடித்து உடைத்துள்ளனர். தற்போது இருக்கைகள் உடைந்து கிடப்பதால் பயணிகள் உட்கார இருக்கைகள் இன்றி பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.