பயனற்ற நிழற்குடை

Update: 2023-05-21 11:53 GMT

ஈரோடு- கரூர் செல்லும் சாலையில் உள்ள ஆசாரி பட்டறை பகுதியில் அப்பகுதியை சேர்ந்த பயணிகளின் நலன் கருதி அங்கு நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த பயணிகள் நிழற்குடை அருகே அனைத்து பஸ்களும் நின்று சென்றன. அதனால் பல்வேறு ஊர்களுக்கு செல்வர்கள் நின்று செல்லும் பஸ்களில் ஏறி பல்வேறு ஊர்களுக்கு சென்று வந்தனர். இந்நிலையில் ஒரு சில பஸ்களை தவிர மற்ற எந்த பஸ்களும் தற்போது இந்த நிழற்குடை முன்பு நின்று செல்வது இல்லை. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி