அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2023-05-21 11:53 GMT

கரூர் மாவட்டம், கொடுமுடி -பரமத்தி வேலூர் வழிதடத்தில் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் தற்போது கொடுமுடியில் இருந்து வரும்போது வேலாயுதம்பாளையம் மலை வீதி பாலத்துறை வழியாக செல்கிறது. வேலூர்- வேலாயுதம்பாளையம், கொடுமுடி செல்வதற்கு வரும்போது பாலத்துறை வாழியாக (புதிய தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம்) செல்லமுடியாத காரணத்தால் பாலம் வழியாக செல்லவேண்டும் (பைபாஸ்) அந்த இடத்தில் எல்லா பஸ்களும் நிற்க அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நகர பஸ்கள் ஒரு சில நின்று செல்கிறது. தனியார் பஸ்கள் நிற்பது இல்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் தற்போது கந்தம்பாளையத்திலிருந்து வேலாயுதம்பாளையம் வரை சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அனைத்து வாகனங்களும் நேராக செல்ல முடியாமல் புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில் மலையை சுற்றி செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளது. எனவே பறிக்கப்பட்டுள்ள குழியை உடனடியாக சீரமைத்து அனைத்து வாகனங்களும் கந்தம்பாளையத்திலிருந்து வேலாயுதம்பாளையத்திற்கு நேராக செல்ல நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி