சித்தோட்டில் இருந்து வரும் பெரும்பாலான டவுன் பஸ்கள் சூளை பஸ் நிறுத்தத்தில் நிற்பதில்லை. பெண்கள் நிற்பதை பார்த்தால் தொலைவில் கொண்டு போய் டிரைவர்கள் பஸ்களை நிறுத்துகிறார்கள். அதுபோல் இறங்கும் இடம் வரும்போதும் சரியான நிறுத்தத்தில் நிறுத்தாமல் சற்று முன்னதாகவோ, தள்ளியோ நிறுத்துகிறார்கள். இங்கு மட்டுமின்றி, ஈரோட்டை சுற்றி பல இடங்களிலும் டவுன் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் பெண் பயணிகளை மிகவும் அநாகரிகமாக நடத்துகிறார்கள். இதனை களையும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.