கோவை-பொள்ளாச்சி இடையே வண்டி எண்: 06419 மற்றும் 06420 கொண்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்கள் கோவில்பாளையம், தாமரைக்குளம் ஆகிய பகுதிகளில் நின்று செல்வது இல்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மேற்கண்ட ரெயில் சேவையை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து பலமுறை ரெயில்வே அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இனிமேலாவது அதிகாரிகள் கவனத்தில் கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.