பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-05-07 17:20 GMT

நாமக்கல்லில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம், நீலியங்காட்டுபுதூர், எர்ணாபுரம் வழியாக பரமத்திக்கு 9ஜி/30 என்ற பஸ் காலை மற்றும் மாலை நேரங்களில் சென்று வந்தது. இந்த பஸ்சை தவிர தனியார் பஸ்களும் தினமும் 2 முறை எர்ணாபுரம் வழியாக சென்று வந்தன. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஊருக்குள் வருவதில்லை. இந்த ஊரை சேர்ந்த பொதுமக்கள், வயதானவர்கள் மருத்துவமனை மற்றும் இதர பணிகளுக்காக நாமக்கல் செல்வதற்கு நீலியங்காட்டுபுதூர் வரை 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து அங்கிருந்து பஸ்சில் நாமக்கல் செல்கின்றனர். எனவே மீண்டும் நிறுத்தப்பட்ட பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்