காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார் சத்திரம் சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் அதிகமான மக்கள் சுங்குவார் சத்திரம் வந்து செல்கின்றனர்.இங்கிருந்து பூந்தமல்லி, சென்னை, பெங்களூரு, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என பல வருடங்களாக கேட்டு வருகிறோம். பெண்கள் மற்றும் முதியவர்கள் இயற்கை உபாதகைகளை கழிப்பதில் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருவதால் மக்கள் கோரிக்கை விரைந்து நிறைவேற்றப்படுமா?
