பயணிகளை பஸ்சில் ஏற்ற மறுப்பு

Update: 2023-04-26 16:01 GMT

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பெரம்பலூர் வழியாக சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் பெரம்பலூர் பயணிகளை ஏற்ற மறுக்கின்றனர். இதனால் பெரம்பலூர் மாவட்ட பகுதி மக்கள் இரவு நேரத்தில் திருச்சியில் இருந்து பெரம்பலூர் செல்ல பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பெரம்பலூர் வழியாக செல்லும் அரசு விரைவு பஸ்கள் பெரம்பலூர் பஸ் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்