பஸ் பயணிகள் கடும் அவதி

Update: 2023-04-26 12:02 GMT

புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலை பட்டியிலிருந்து புதுக்கோட்டைக்கு செல்லும் 10-ம் எண் கொண்ட அரசு டவுன் பஸ் காலையில் மட்டுமே நகரினை சுற்றி செல்கிறது. மற்ற அனைத்து நேரங்களில் இருந்து இரவு வரை திருவப்பூர் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் சென்று விடுகிறது. இதனால் ராணி ஆஸ்பத்திரிக்கு செல்லும் கர்ப்பிணிகள், மற்ற மருத்துவமனைக்கு செல்பவர்கள் மற்றும் கடை வீதிகளுக்கு செல்பவர்கள் பஸ் நிலையத்திலிருந்து ஆட்டோவிற்கு ரூ.100 கொடுத்து செல்ல வேண்டியுள்ளது. காசு இல்லாதவர்கள் நடந்து செல்லும் அவல நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்