தொடரும் விபத்துகள்

Update: 2023-04-23 11:53 GMT

கொடுமுடி, ஒத்தக்கடை, சாலைப்புதூர், நொய்யல், பரமத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து இரட்டை டிப்பருடன் கூடிய டிராக்டர்களை பல்வேறு வகையான சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஓட்டி வருகின்றனர். இதனால் நொய்யல்-வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்பும் ஏற்பட்டு வருகிறது. இரட்டை டிப்பரில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக செல்லும் டிராக்டரால் பிரேக் பிடிக்காமல் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இரட்டை டிப்பர்கள் இருப்பதால் பிரேக் போட்டாலும் உடனடியாக இரண்டு டிப்பர்களும் நிற்பதில்லை. போகும் வேகத்தில் நகர்ந்து கொண்டு சென்று முன்னாள் செல்லும் வாகனத்தின் மீது டிராக்டர் என்ஜின் மோதி விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. இதேபோல் இரவு நேரங்களில் இரட்டை டிப்பர்களை ஓட்டி செல்லும்போது 2 டிப்பர்கள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் டிப்பர் மீது மோதியதில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்