அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்று பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் பள்ளி அருகே உள்ள சாலையை கடப்பதற்கு ஏதுவாக சாலையின் குறுக்கே வேகத்தடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதனால் இந்த வழியாக சென்ற வாகனங்கள் சீராக சென்று வந்தன. இந்நிலையில் முதல்-அமைச்சரின் வருகையையொட்டி சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டன. ஆனால் அந்த இடத்தில் மீண்டும் வேகத்தடைகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் வேகமாக செல்வதினால் மாணவ-மாணவிகள் விபத்தில் சிக்கிக் கொள்ளும் அபாய நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.