புதுச்சேரி - கடலூர் சாலையில் ரெயில்வே கேட் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் வேகத்தடை அமைக்கப்பட்டது. வழக்கத்தை விட சற்று உயரமாக இருப்பதாலும், இந்த வேகத்தடை மீது வெள்ளை நிற வண்ணம் பூசாததாலும் அது இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் வேகமாக வந்து விபத்தில் சிக்குகின்றனர். இதைதவிர்க்க வேகத்தடை மீது பெயிண்ட் அடிக்க வேண்டும்.