கரூர் மாவட்டம், புலியூர் கரூர்- திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஊராகும். பேரூராட்சியின் தலைமை இடமாக அமைந்துள்ள இந்த ஊரின் வழியாக தினந்தோறும் அரசு, தனியார் பஸ்கள் என அதிகப்படியான பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் இங்கு அதிக அளவில் பயணிகள் காத்திருந்து தங்கள் பகுதிக்கு பஸ்களில் ஏறியும், இறங்கியும் செல்கின்றனர். அவ்வாறு காத்திருக்கும் பஸ் பயணிகள் நிழல் குடை இல்லாததால் கொளுத்தும் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இது வயது முதிர்ந்தோர், உடல் நலம் பாதிக்கப்பட்டோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் என பலருக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு அதிக அளவில் பயணிகள் அமர்ந்து இருக்கக்கூடிய வகையில் பயணியர் நிழல் குடை அமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.