திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து ஜெயங்கொண்டம், கங்கைகொண்டசோழபுரம், எக்ஸ் ரோடு, மீன்சுருட்டி, காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, குமராட்சி வழியாக சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதில் நம்பர் ஒன் டோல்கேட் பழூர் சாலையில் இருந்து பல கோடி ரூபாய் பொருட்செலவில் புதிய தேசிய நெடுஞ்சாலை அமைப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதில் இலகுரக வாகனங்கள், கனரக வாகனங்கள் மட்டுமே சென்று வருகிறது. பொதுப்போக்குவரத்தான பயணியர் போக்குவரத்து சேவை இன்றளவிலும் ஆரம்பிக்கப்படவில்லை. ஜெயங்கொண்டம், கங்கை கொண்ட சோழபுரம், சிதம்பரம் செல்லும் பொதுமக்களின் பயண நேரத்தை குறைப்பதற்காகவும் எளிதாக சென்று வருவதற்காகவும் அமைக்கப்பட்ட சாலையில் அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் இயங்காமல் உள்ளது, பயணிகளை வருத்தமடையச் செய்கிறது. எனவே திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும் ஜெயங்கொண்டம், விருத்தாச்சலம், கங்கை கொண்ட சோழபுரம், சிதம்பரம் செல்லும் விரைவு பஸ்களை நம்பர் ஒன் டோல்கேட் பழூரில் புதிதாக பல கோடிகள் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை வழியாக இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.