அரியலூர் பஸ் நிலையத்திலிருந்து தமிழகத்தின் அனைத்து முக்கியமான பகுதிகளுக்கும் பயணிகள் நலன் கருதி தமிழக அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தனியார் பஸ் நிறுவனங்கள் அதிக அளவில் பொது போக்குவரத்தான பயணியர் பஸ் சேவைகளை இயக்கி வருகிறார்கள். இதன் மூலம் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பஸ் பயணிகள் பயன் அடைந்து வருகின்றனர். ஆனால் அரியலூரிலிருந்து பெரம்பலூர், துறையூர், நாமக்கல், ஈரோடு, அவிநாசி, மேட்டுப்பாளையம், குன்னூர் வழியாக ஊட்டிக்கு செல்ல இன்று வரை நேரடி அரசு பஸ் வசதி இல்லை. பஸ் பயணிகள் ஊட்டி செல்வதென்றால் பல பஸ்கள் மாறி செல்ல வேண்டியுள்ளது. இதனால் பயண நேரம் அதிகரிப்பதுடன் கூடுதல் செலவும் ஆகிறது. சிமெண்டு நகரம் அரியலூரிலிருந்து ஊட்டி செல்வதற்கு தினமும் இரவு 9 மணிக்கு பெரம்பலூர், துறையூர், நாமக்கல் வழியாக புதிய நேரடி பஸ் சேவையினை ஏற்படுத்திக்கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.