சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரெயில்வே நிலையத்திற்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து குறைந்த அளவிலே டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இயங்கும் பஸ்களில் கூட்டம் அதிகரிப்பதால் பெண்கள் ஏற முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் மாணவர்கள் படிகட்டில் தொங்கியபடி பயணிக்கின்றனர். இதனால் பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும்.