கிருஷ்ணகிரியில் ஆவின் மேம்பாலம் அருகே சென்னை செல்லும் வாகனங்களும், சென்னையில் இருந்து வரக்கூடிய வாகனங்களும் அங்கு சந்திக்கும் முக்கியமான சாலையாகும். இங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் விபத்துகளும் நடக்கின்றன. அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சிக்னல் விளக்குகள் அமைக்க வேண்டும். மேலும் அந்த இடத்தில் போக்குவரத்து போலீசார் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.