நாகை தோணித்துறை ரெயில்வே கேட் மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வந்தது. இதனால் அந்த பாதைக்கு பதிலாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மாற்று பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக நாளுக்கு நாள் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தோணித்துறை ரெயில்வே கேட் மேம்பால பணிகளை விரைந்து முடிப்பார்களா?